Jul 27, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் லாரியுடன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் லாரியுடன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்

Share:

கோப்பேங், ஏப்ரல் 05-

பேராக், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 307.5 ஆவது கிலோமீட்டரில் லாரியுடன் டிரெய்லர் மோதியதில் இரண்டு வங்காளதேச பிரஜைகள் உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை 5.55 மணியளவில் பொருட்களை ஏற்றி சென்ற மூன்று டன் எடையுள்ள லாரி, மாவுகளை கொண்டு சென்ற டிரெய்லருடன் மோதி விபத்துக்குள்ளானதாக பேராக், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் உதவி இயக்குநர் சபரோட்சி னோர் அஹ்மத் தெரிவித்தார்.

உள்ளூரை சேர்ந்த 36 வயதுடைய லாரி ஓட்டுநருக்கு கை முறிவு ஏற்பட்ட வேளையில் அதில் பயணித்த 26 மற்றும் 29 வயதுடைய அந்நிய பிரஜைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சபரோட்சி னோர் கூறினார்.

இக்கோர விபத்தில் 58 வயதுடைய டிரெய்லர் ஓட்டுநர் பலத்த காயமின்றி அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதாக அவர் தெளிவுப்படுத்தினார். மேல் நடவடிக்கைகளுக்காக விபத்தில் இறந்தவர்களின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சபரோட்சி னோர் இன்று ஓர் அறிக்கையில் விவரித்தார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்