கோலாலம்பூர் - ஜாலான் ஈப்போ சாலையின் 77.5 ஆவது கிலோமீட்டரில் , தாப்பா அருகில் டிரெய்லர் லோரியுடன் மோதிய காரோட்டி ஒருவர் உயிரிழந்தார். இன்று காலையில் நிகழ்ந்த இவ்விபத்தில் சிலிம் ரீவர், சிலிம் வில்லேஜ்ஜை சேர்ந்த Muhammaed Khairy Aznie Bahraum என்பவர் உயரிழந்ததாக தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார்.
Perodua Myvi காரில் பயணித்த அந்த ஆடவர், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, எதிர்சாலையில் வந்து கொண்டிருந்த லோரியின் சக்கரத்தில் மோதியதாக பூர்வாங்க புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று Wan Azharuddin குறிப்பிட்டார்.








