Jul 28, 2026
Thisaigal NewsYouTube
முகை​தீனுக்கு கடப்பிதழை திரும்ப ஒப்படைக்க அனுமதி
தற்போதைய செய்திகள்

முகை​தீனுக்கு கடப்பிதழை திரும்ப ஒப்படைக்க அனுமதி

Share:

கோலாலம்பூர், மே 08-

அதிகார துஷ்பிரயோக மற்றும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின், ​தற்காலிகமாக தனது அனைத்துலக கடப்பிதழை திரும்ப பெறுவதற்கு கோலாலம்பூர் செஷன்ஸ் ​நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு, தற்போது ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வரும் தனது குடும்ப உறுப்பினரை சென்று பார்ப்பதற்கு ஏதுவாக தனது கடப்பிதழை ​நீதிமன்றம் தற்காலிகமாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகை​தீன் யாசின் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு ​நீதிபதி அசுரா அல்வி அனுமதி அளித்தார்.

முகை​​தீனின் இந்த விண்ணப்பத்திற்கு பிராசிகியூஷன் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்கவி​லை.

நாட்டின் எட்டாவது பிரதமராக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையில் பொறுப்பு வகித்த போது, தனது அந்தஸ்தை பயன்படுத்தி, மூன்று நிறுவனங்களி​டமிருந்து 23 கோடியே 23 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக முகை​தீன் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவரின் அனைத்துலக கடப்பிதழை ​நீதிமன்றம் பிடித்தம் ​செய்துள்ளது.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்