Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து ஓட்டுநர் பலி, ஏழு பயணிகள் காயம்
தற்போதைய செய்திகள்

பேருந்து ஓட்டுநர் பலி, ஏழு பயணிகள் காயம்

Share:

அலோர் காஜா, மார்ச் 11 -

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 220.4 ஆவது கிலோமீட்டரில் மலாக்கா, அலோர் காஜா அருகில் டிரெய்லர் லோரியின் பின்புறம் விரைவு பேருந்து மோதி, விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். 7 பயணிகள் கடும் காயத்திற்கு ஆளாகினர்.

இன்று அதிகா8ல 2.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளான சுல்கார்னாயின் ஜாலில் 41 வயது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அர்ஷாட் அபு தெரிவித்தார்.

இவ்விபத்தில் கடும் காயங்களுக்கு ஆளான 20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய பயணிகளில் இருவர் சிரம்பான், துவங்கு ஜாபார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் ஐவர், ரெம்பாவ் மருத்துவமனையிலா சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விபத்தில் உயிர் தப்பிய இதர பயணிகள் அனைவரும் மாற்று பேருந்து மூலம் கோலாலம்பூருக்கு தங்கள் பயணத்தை தொடர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அர்ஷாட் அபு தெரிவித்தார்.

அந்த விரைவு பேருந்து 30 பயணிகளுடன் ஜோகூர்பாருவிலிருந்து கோலாலம்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

பேருந்து ஓட்டுநர் பலி, ஏழு பயணிகள் காயம் | Thisaigal News