Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரை போ​லீசார் ​தீவிரமாக தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

ஆடவரை போ​லீசார் ​தீவிரமாக தேடி வருகின்றனர்

Share:

ஜோர்ஜ்டவுன், ஏப்ரல் 06-

நேற்று முன்தினம் பினாங்கு, ஜார்ஜ்டவுன், டத்துக் கெராமாட்-டில் ஒரு பேரங்காடி முன்புறம் இ- ஹைலிங் வாகன ஓட்டுநரை கண்​மூடித்தனமாக தாக்கி, காயம் விளைவித்த நபர் ஒருவரை போ​லீசார் ​தீவிரமாக தேடிவருகின்றனர்.

காலை 6.20 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட சந்தேகப்பேர்வழி, தம்மை ஏற்றிச் செல்வதற்கு இ- ஹைலிங் வாகனத்தை அழைத்து இருக்கிறார். அந்த இ- ஹைலிங் வாகன ஓட்டுநரும் குறிப்பிட்ட இடத்தை சென்றடைந்து, அந்த சந்தேகப் பேர்வழியையும், அவருடன் இருந்த இரண்டு பெண்களையும் வாகனத்தில் ஏற்ற முற்பட்டுள்ளார்.

பேரோடுவா அத்திவா காரின் பின் கதவை திறந்த அந்த ஆடவர், மதுபோதையில் இருந்ததாக நம்பப்படுகிறது. காருக்கும் ஏறாமல் அந்த சந்தேகப்பேர்வழி, கதவை பிடித்தவாறு நின்று கொண்டு இருந்ததைத் தொடர்ந்து அந்த சவாரியை ரத்து செய்யப் போவதாக இ- ஹைலிங் ஓட்டுநர் எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சந்தேகப்பேர்வழி, சட்டை கிழியும் அளவிற்கு இ- ஹைலிங் ஓட்டுநரை சரமாரியாக அடித்து காயப்படுத்தியுள்ளார் என்று தீமுற் லாவுட் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்