Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மின்னல் தாக்கி விவசாய தொழிலாளி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மின்னல் தாக்கி விவசாய தொழிலாளி உயிரிழந்தார்

Share:

பகாங், ஏப்ரல் 25-

பகாங், பெல்டா ஜெங்க்கா-வில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது இந்தோனேசிய ஆடவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் விவசாய தொழிலாளியான 40 வயதுடைய கமாருதின் என்கிற அவ்வாடவர் மழையின் காரணமாக ரம்பாய் மரத்தடியில் காத்திருந்த வேளையில் மின்னல் தாக்கி சுயநினைவற்ற நிலையில் இருந்ததை குறித்து அவரின் நண்பர் காவல்துறையில் புகார் அளித்ததாக மாரான், மாவட்ட போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் முகமது ஜம்ரி முகமது சாபர் தெரிவித்தார்.

கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது அவ்வாடவர் மரத்தடியில் இருப்பதை கண்டறிந்ததாக முகமது ஜம்ரி குறிப்பிட்டார்.

மருத்துவ அதிகாரிகள் அவ்வாடவர் உயிரிழந்ததை உறுதி செய்ததை அடுத்து மேற்கண்ட நடவடிக்கைகளுக்காக அவரின் உடல் ஜெங்க்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முகமது ஜம்ரி மேலும் தகவலளித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்