கோலாலம்பூர், நவம்பர்.11-
2025 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வின் வாய்மொழிச் சோதனைக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்து விட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கல்வி அமைச்சு இன்று மறுத்துள்ளது.
பகிரப்பட்டுள்ள தகவல்கள், பொதுவான கருப்பொருள்களின் பட்டியல் என்றும், அவை பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு தரநிலை ஆவணத்தில் (DSKP) காணப்படும் வழக்கமான உள்ளடக்கமாகும் என்றும் கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.








