லஞ்ச ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மினால் தேடப்பட்டு வரும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின்ன மருமகனை பிடிப்பதற்கு இண்டர்போல் போலீசாரின் பதிலுக்காக அரச மலேசிய போலீஸ் படை காத்திருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.
இண்டர்போல் கோரிய அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இனி முகைதீனின் மருமகன் 48 வயதுடைய முகமது அட்லான் மற்றும் அவரின் வழக்கறிஞர் 69 வயது மன்சோர் சஹாட் ஆகியோரை பிடிப்பதற்கு சிறப்பு நோட்டீஸ் வெளியிடப்பட வேண்டியதான் பாக்கி என்று ஐஜிபி விளக்கினார்.








