Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இளம் பெண் பாலியல் பலாத்காரம், வர்த்தகர் கைது
தற்போதைய செய்திகள்

இளம் பெண் பாலியல் பலாத்காரம், வர்த்தகர் கைது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 20-

நேர்முகப் பேட்டிக்கு வந்த இளம் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, அப்பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்து சென்று இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் 36 வயது வர்த்தகர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முதலாளியை சந்திப்பதற்கு அழைத்து செல்வதாக பொய்யுரைத்து, 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அந்த வர்த்தகர், கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி உலு லங்காட்டில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் நஸ்ருவேல் எக்ரம் அபு சாரே இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வர்த்தகருடன் சென்ற அந்த இளம் பெண், தாம் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்து, அந்த வர்த்தகருக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளார்.

தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த வர்த்தகர், விசாரணைக்கு ஏதுவாக வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வரையில் 6 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக நஸ்ருவேல் எக்ரம் மேலும் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்