Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பூர்வாங்க அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்
தற்போதைய செய்திகள்

பூர்வாங்க அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்

Share:

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி, சுங்கை பூலோ அருகில் எல்மினாவில் கத்ரி நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய பீச்கிராஃப்ட் பிரீமியர் 1 இலகு ரக விமான விபத்து தொடர்பான புலன் விசாரணையின் பூர்வாங்க அறிக்கை வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

பத்து பேர் உயிரிழந்த இந்த விபத்து மீதான பூர்வாங்க புலன் விசாரணை அறிக்கையில் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட ஆகக்கடைசியாக பதிவான அந்த 30 நிமிட உரையாடலும் இடம் பெற்று இருக்கும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த அறிக்கையை வெளியிடுவது மூலம் விபத்திற்கான காரணத்தை கண்டறிய முடியும் என்று அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News