மாமன்னரை இழிவு படுத்தும் வகைஅயில் முகநூல், டிக்டோக் ஆகிய வலைத்தளங்களில் கருத்துகளப் பதிவிட்ட இருவர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டனர்.
முஹமாட் ஃபர்ஹான் எனும் முகநூல் கணக்கிற்கு உரிமையாளர் என நம்பப்படும் 32 வயதுடைய ஆடவரை நேற்று கோம்பாக் வட்டாரத்திலும், அஸ்வானார் 90 எனும் டிக்டோக் கணக்கிற்கு உறிமையாளர் என நம்பப்படும் 33 வயது ஆடவரை இன்று பினாங்கு பாலிக் பூலாவிலும் கைது செய்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் டத்தோ செரி முஹமாட்ஷுஹைலி முஹமாட் சயின் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறவர்கள் அறிவார்ந்த முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் எந்தக் கருத்தையும் பொது மக்கள் பதிவிடக் கூடாது என முஹமாட் ஷுஹைலி அறிவுறுத்தினார்.

Related News

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

ஆபாசச் சேட்டை: மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்


