மலேசியாவில் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 1,700 ரிங்கிட்டிலிருந்து 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படுவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். இந்தப் புதிய சம்பள விகிதம் 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும்.
50 மில்லியன் ரிங்கிட்டுக்கும் குறைவான ஆண்டு விற்பனை வருமானம் கொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்தப் புதிய விகிதத்தைச் செயல்படுத்துவதில் விலக்கு அளிக்கப்படும். புதிய குறைந்தபட்சச் சம்பளத்தால் நான்கு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பகுதியளவு திறன் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு ஆரம்பகட்டமாக மாதம் 2,500 ரிங்கிட் குறைந்தபட்சச் சம்பளத்தை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.








