May 22, 2026
Thisaigal NewsYouTube
குழந்தை பராமரிப்பாளருக்கு 7 நாட்கள் தடுப்பு காவல்
தற்போதைய செய்திகள்

குழந்தை பராமரிப்பாளருக்கு 7 நாட்கள் தடுப்பு காவல்

Share:

Kemaman, Paya Berenjut - டில் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் விடப்பட்டிருந்த ஐந்து மாத பெண் குழந்தை ஒன்று இடது கை முறிந்து, தலையில் அடிப்பட்டு இரத்தம் கொட்டும் நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அந்த குழந்தையின் பராமரிப்பாளர் இன்று முதல் 7 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண் பராமரிப்பாளரை விசாரணைக்கு உதவும் வகையில் வருகின்ற வெள்ளிக்கிழமை வரையில் தடுப்பு காவலில் வைப்பதற்கு Majistret Sharifah Amirda Shasha Amir Sharifuddin உத்தரவு பிறப்பித்துள்ளார்.நேற்று காலை 11 மணியளவில் 29 வயது அந்த குழந்தையின் பராமரிப்பாளர் பாதிக்கப்பட்ட கைக்குழந்தையின் தாயாரை தொடர்பு கொண்டு, குழந்தைக்கு காய்ச்சலாக இருப்பதாக கூறினார்.

அதை அடுத்து, அக்குழந்தையை அவரின் தாயார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த போது, பாதிக்கப்பட்ட குழந்தையின் கை மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

Related News