மலாக்கா, மே 30-
மலாக்கா, ஜாசின் தெற்கே செல்லும் 190.7 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகியதில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த வேளை, நான்கு பேர் படுங்காயத்திற்கு ஆளாகினர்.
இன்று நள்ளிரவு 2 மணியளவில் அலோர் காஜா, சிம்பாங் அம்பாட் -டிலிருந்து ஜொகூருக்கு 20 மோட்டார் சைக்கிள் குழு பயணத்தின் உறுப்பினர்கள் 35 வயது முகமது அஃபிர்சுல் ஹம்சா என்ற அந்த லாரி ஓட்டுநர் வந்து கொண்டிருக்கும் வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் அஹ்மத் ஜமீல் ரட்ஸி தெரிவித்தார்.
இச்சம்பவ இடத்தில், மோட்டார் சைக்கிள் குழு பயணத்தின் உறுப்பினர்களில் ஒருவரான 20 வயது ஜக்ருல் அரிஃபின் மின்ஹாட், சாலையில் இருந்த டயரின் கிழிந்த பாகத்தின் மீது மோதி வேகக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததாகவும் மேலும் பின் தொடர்ந்து வந்த நான்கு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகியதாகவும் அஹ்மத் ஜமீல் குறிப்பிட்டார்.
விபத்தில் சிக்கிய அனைவரும் ஜாசின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதுடன் இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 41(1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.








