May 22, 2026
Thisaigal NewsYouTube
மூன்றாவது நபரின் சடலம் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

மூன்றாவது நபரின் சடலம் மீட்கப்பட்டது

Share:

லுமூட் அருகில் செகாரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டு இருந்த பதின்ம வயதுடைய மூன்று இந்திய இளைஞர்கள் நீரில் மூழ்கிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஆகக்கடைசி நபரின் உடலும் மீட்கப்பட்டது.

16 வயது டி. ஈஸ்வர் பிள்ளை என்ற அந்த இளைஞரின் சடலம் இன்று மாலை 5.05 மணிக்கு மீட்கப்பட்டது. அவரின் உடல் சம்பவ இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டு பிடிக்கப்பட்டதாக ன பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் இயக்குநர் சயானி சைடன் தெரிவித்தார்.

மூன்று இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டு விட்டதால் மீட்புப்பணி மாலை 5.30 மணிக்கு நிறைவு பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

14 வயது தர்மராஜ் , 16 வயது G. சரத் மற்றும் 16 வயது T. ஈஸ்வர் பிள்ளை ஆகிய மூவரே நீரில் மூழ்கி மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3.26 மணியளவில் கம்போங் தஞ்சோங் பத்து செகாரி, சுங்கை செம்பிட் ஆற்றில் அந்த மூன்று இளைஞர்களும் மீன்பிடித்துக்கொண்டும் , குளித்துக்கொண்டும் இருந்த போது நீரின் வேகத்தில் மூவரும் அடித்துச் செல்லப்பட்டனர்.

மூவரின் உடல்களும் சவப்பரிசோதனைக்காக செரி மஞ்சோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

Related News