Jul 10, 2026
Thisaigal NewsYouTube
ஏஐ பயிற்சியை இலவசமாக வழங்கியது பூச்சோங் நாடாளுமன்ற அலுவலகம்
தற்போதைய செய்திகள்

ஏஐ பயிற்சியை இலவசமாக வழங்கியது பூச்சோங் நாடாளுமன்ற அலுவலகம்

Share:

பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதி குடியிருப்பாளர்களின் செயற்கை நுண்ணறிவான ஏஐ திறன்களை மேம்படுத்துவதற்காக, பூச்சோங் நாடாளுமன்ற அலுவலகம் 25 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கீட்டில் மானியத்தில் சிறப்பு ஏஐ பயிற்சித் திட்டத்தை நேற்று ஸ்ரீ கெம்பாங்கானில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்ட இப்பயிற்சியில் இம்முறை 300 குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர். கடந்த ஆண்டு 200 பேர் பங்கேற்ற நிலையில், இம்முறை பொதுமக்களின் பேராதரவால் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இளைஞர்கள் மட்டுமின்றி 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு 'தொடர் கற்றல்' ஆர்வத்தை வெளிப்படுத்தினர் என்று நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றிய பூச்சோங் நாடாளுன்ற இயோ பி யின் உறுப்பினர் தெரிவித்தார்.

தினசரி வாழ்க்கையிலும், வேலை செய்யும் இடத்திலும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ஏஐ தொழில்நுட்பம் உதவும் என்பதால், கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற்று இத்திட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது என்று பூச்சோங் எம்.பி. நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி யின் தெரிவித்தார்.

இந்த ஏஐ பயிற்சித் திட்டம் மிக சுமூகமாகவும், ஆர்வத்துடன் கலந்து கொண்ட தொகுதி மக்களுக்கு பெரும் பயனாக அமைந்தது என்றும் பூச்சோங் நாடாளுமன்றத்தொகுதிக்கு உட்பட்ட செரி கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் வாங் சியூ கி தெரிவித்தார்.

பூச்சோங் தொகுதி மக்களுக்கு இது போன்ற பயிற்சி அளிப்பது இது எட்டாவது முறையாகும். இதுவரையில் ஆயிரத்து 800 பேர் பயன்பெற்றுள்ளதாக பூச்சோங் எம்.பி. இயோ பி யின்யின் பிரதிநிதியும், நிகழ்வில் ஏற்பாட்டுக்குழு இணைத் தலைவருமான ராஜசூரியா லெட்சுமணன் தெரிவித்தார்.

சாமானிய மக்கள் முதல் தொழில் முனைவர்கள் வரையில் ஏஐ பயிற்சித் திட்டம் தங்களுக்கு மிகுந்த பலனை தந்ததாக நிகழ்வில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்தை விவரித்தனர்.

செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் இளைஞர்களுக்கானது மட்டுமல்ல, அது அனைத்து வயதினருக்குமான காலத்தின் தேவை என்பதை பூச்சோங் குடியிருப்பாளர்களின் இந்த நேர்காணல்கள் நமக்கு உணர்த்துகின்றன. நாடாளுமன்ற அலுவலகத்தின் இந்த இலவச முயற்சி, சாதாரண அடித்தட்டு மக்களையும் நவீன தொழில்நுட்பத்தை நோக்கி வெற்றிகரமாக நகர்த்தியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்