May 22, 2026
Thisaigal NewsYouTube
இரு ஆடவர்கள் படுகாயம்
தற்போதைய செய்திகள்

இரு ஆடவர்கள் படுகாயம்

Share:

பினாங்கு, ஜூன் 04-

பினாங்கு, ஜெலுடோங்- கில் உள்ள ஒரு வீடமைப்புப்பகுதியில் . கடந்த திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நிகழ்ந்த கத்தி வெட்டு சண்டையில் இரு ஆடவர்கள் படுகாயம் அடைந்தனர்.

முன்விரோதம் காரணமாக நடந்த இந்த சண்டையில் வெட்டுக்கத்தி பயன்படுத்தப்பட்டதால் இரு நபர்களும் கடும் காயங்களுக்கு ஆளாகி, பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துல் ஹமீத் தெரிவித்தார்.

இரு தரப்பினரும் போலீஸ் புகார் செய்துள்ள இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டம் 324 ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வரும் வேளையில் இது தொடர்பான காணொளியை சமூக வளைத் தளங்களில் பகிர வேண்டாம் என்று பொது மக்களுக்கு ஏசிபி ரஸ்லாம் அறிவுறுத்தியுள்ளார்.

Related News