Mar 16, 2026
Thisaigal NewsYouTube
120 தடுப்புக்கைதிகள் தொடர்ந்து தேடப்பட்டு வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

120 தடுப்புக்கைதிகள் தொடர்ந்து தேடப்பட்டு வருகின்றனர்

Share:

பேரா, பீடோர் குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமிலிருந்து தப்பிச் சென்ற 130 சட்டவிரோதக் குடியேறிகளில் இன்னும் 120 பேர் தொடர்ந்து தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் இதுவரையில் பத்து பேர் மட்டுமே பிடிபட்டுள்ளனர். இன்னும் 120 பேர், போலீஸ் துறை மற்றும் ரேலா தொண்டூழியப்பிரிவு ஆகியவற்றின் உதவியுடன் குடிநுழைவுத்துறை தொடர்ந்து தேடி வருவதாக Ruslin Jusoh குறிப்பிட்டார். பிடிபட்ட பத்து பேரில் மூவர், இன்று காலையில் இரு வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் பொது மக்களின் உதவியுடன் சுமார் 12 கிலோ மீட்டர் தூர பரப்பளவிற்குள் பிடிபட்டதாக ரஸ்லின் ஜூசோ விளக்கினார்.

Related News