Sep 25, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் ரக்பி பயிற்சியின்போது 14 வயது மாணவர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் ரக்பி பயிற்சியின்போது 14 வயது மாணவர் உயிரிழப்பு

Share:

மலாக்கா மாநிலத்தின் தெலோக் மாஸ் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற ரக்பி பயிற்சியின் போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மயங்கி விழுந்த 14 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது, அம்மாணவர் சுமார் 15 நிமிடங்கள் பயிற்சியில் ஈடுபட்ட பின்னர், இடைவேளையின் போது பயிற்சியாளர் வழங்கிய விளக்க உரையை கேட்டுக்கொண்டிருந்த நிலையில், திடீரென மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதாக கூறப்படுகின்றது.

அதன் பின்னர் அவர் மயங்கி விழுந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

மலாக்காவில் ரக்பி பயிற்சியின்போது 14 வயது மாணவர் உயிரிழப்பு | Thisaigal News