Jun 25, 2026
Thisaigal NewsYouTube
ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை
தற்போதைய செய்திகள்

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை

Share:

ஜப்பானின் வடக்கு பகுதியில் இன்று வியாழக்கிழமை 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளிலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் பிரதான தீவான ஹோன்ஷூவில் உள்ள இவதே மாநிலக் கடற்கரைக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 50 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக, சிங்கான்சென் அதிவேக ரயில் சேவைகளில் சில தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உயிரிழப்பு அல்லது காயம் தொடர்பான எந்த தகவலும் இதுவரை பதிவாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

Related News