Jul 16, 2026
Thisaigal NewsYouTube
வாயுக் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்
தற்போதைய செய்திகள்

வாயுக் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்

Share:

பசிர் கூடாங் பகுதியில் உள்ள தாமான் ஆயர் பிரு குடியிருப்பில் வாயுக் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீக்காயமடைந்தனர்.

இச்சம்பவமானது, நேற்று இரவு சுமார் 9.26 மணியளவில், பிளாக் 14-ன் மூன்றாவது மாடி வீட்டில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாசிர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைத் தலைவர் பிர்தௌஸ் அஹ்மத் கூறுகையில், அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் 5 நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தீ விபத்திற்கான காரணம் வாயுக் கசிவு என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Related News