Jun 25, 2026
Thisaigal NewsYouTube
மேற்கு ஆசிய நெருக்கடியால் புடி மதானி மானியச் செலவு மூன்று மடங்கு அதிகரிப்பு - நிதியமைச்சு தகவல்
தற்போதைய செய்திகள்

மேற்கு ஆசிய நெருக்கடியால் புடி மதானி மானியச் செலவு மூன்று மடங்கு அதிகரிப்பு - நிதியமைச்சு தகவல்

Share:

புடி மதானி எரிபொருள் மானியத் திட்டத்தின் மூலம், கடந்த மே 31- ஆம் தேதி வரையில், 14 மில்லியன் மலேசியர்கள் பயனடைந்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து நிதியமைச்சு வெளியிட்டுள்ள தகவலின் படி, இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 11.1 பில்லியன் லிட்டர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதன் மொத்த விற்பனை மதிப்பு 22.1 பில்லியன் ரிங்கிட்டாகப் பதிவாகியுள்ள நிலையில், அவற்றில் 11.2 பில்லியன் ரிங்கிட் தொகையை அரசாங்கம் மானியமாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், மேற்கு ஆசியாவில் போர் நெருக்கடி தொடங்கியதிலிருந்து, புடி மதானி எரிபொருள் மானியத் திட்டத்திற்கான அரசாங்கத்தின் செலவினம் 2025-ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் சராசரியாக மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நேற்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட அமைச்சரவைக்கான எழுத்துப்பூர்வ பதிலில், இந்த தகவலை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

Related News