May 21, 2026
Thisaigal NewsYouTube
போலி டத்தோ மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போலி டத்தோ மீது குற்றச்சாட்டு

Share:

ஈப்போ,பிப்.8
தமது பெயருக்கு முன் போலி டத்தோ அந்தஸ்தை பயன்படுத்தி பிரமுகரைப் போல நடமாடி வந்த வர்த்தகர் ஒருவர், கைது செய்யப்ப்டடு, ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

59 வயது சான் சீ செங் என்ற அந்த வர்த்தகர், தனது பெயருக்கு முன்னாள் டத்தோ அந்தஸ்தை அடைமொழியாக சூட்டிக்கொள்வற்கான எந்தவொரு உரிமையும் பெற்றிருக்காத நிலையில் போலி டத்தோ பட்டத்தை பயன்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அந்த வர்த்தகர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி ஈப்போ, ஜாலான் பங்லிமா புக்கிட் கந்தாங் வாஹாப்,ஈப்போ உயர் நீதிமன்றத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 2017 பிரிவின் கீழ் அந்த வர்த்தகர் குற்றச்சசாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News