May 22, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத்திறனாளிகள் கார் நிறுத்தும் இடத்தில் பாதுகாப்பு காவலர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் கார் நிறுத்தும் இடத்தில் பாதுகாப்பு காவலர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்

Share:

ஜொகூர், மே 24-

ஜொகூர், சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் பாதுகாப்பு காவலர்களை ஜொகூர் மாநில சுகாதாரத்துறை பணிக்கு அமர்த்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக, மாற்றுத்திறனாளி ஆடவர் ஒருவரின் கார் பல வாகனங்களால் தடுக்கப்பட்டு வெளியேற முடியாமல் அவ்வாடவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதன் இயக்குநர் டாக்டர் மொஹ்தார் புங்குட் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளின் பணிகளை இலகுவாக்குவதற்கும் அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் அவ்விடத்தில் பாதுகாப்பு காவலர் நிறுத்தப்பட்டிருப்பதாக டாக்டர் மொஹ்தார் புங்குட் கூறினார்.

மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பார்க்கிங் மற்றவர்கள் எளிதாக பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு இம்முயற்சி எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சமீபத்தில் இதுக்குறித்து வெளியேறிய 41 வினாடி காணொளி ஒன்று சமூக வளைத்தலங்களில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related News