May 22, 2026
Thisaigal NewsYouTube
ஜெய்ன் ராயன் பெற்றோரின் வழக்கறிஞராக அரசு தரப்பு முன்னாள் வழக்கறிஞர் நியமனம்
தற்போதைய செய்திகள்

ஜெய்ன் ராயன் பெற்றோரின் வழக்கறிஞராக அரசு தரப்பு முன்னாள் வழக்கறிஞர் நியமனம்

Share:

டாமான்சாரா டாமாய், ஜூன் 04-

ஆட்டிசம் குறைபாடுடைய சிறுவன் ஜெயின் ராயன் அப்துல் மாட்டின் கொலைச் செய்யப்பட்ட விவகாரத்தில், தடுப்புக்காவலிடப்பட்டுள்ள அவரது பெற்றோரை, தாம் பிரதிநிதிக்கவுள்ளதை, அரசு தரப்பு முன்னாள் வழக்கறிஞர் ஃபஹ்மி அப்துல் மொயின் உறுதிபடுத்தியுள்ளார்.

வருகின்ற வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் விசாரணையில், தாம் பங்கெடுக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜெயின் ராயன்-னின் பெற்றோரை பிரதிநிதிப்பதிலிருந்து வழக்கறிஞர் மஹ்முத் அப்துல் ஜூமாஅட், நேற்று விலகிக்கொண்டதை அடுத்து, ஃபஹ்மி அப்துல் மொயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, சிலாங்கூர், டாமான்சாரா டாமாய்-லுள்ள அடுக்ககத்திற்கு அருகாமையில் இருந்த கால்வாயில் சிறுவன் ஜெயின் ராயன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அது குறித்து விசாரணையை நடத்திவந்த போலீஸ், கடந்த வெள்ளிக்கிழமை அவரது பெற்றோரை விசாரணைக்காக கைது செய்தது.

Related News