Sep 6, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

Share:

சிரம்பான், ஆகஸ்ட்.02-

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக இன்று பதவியேற்றுள்ள டத்தோ இஸ்மாயில் லாசிம், நாளை ஆகஸ்ட் 3 -ஆம் தேதி திங்கட்கிழமை மாநிலம் முழுவதும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளார்.

Istana Besar Seri Menanti அரண்மனையில் இன்று மந்திரி பெசாராகப் பதவியேற்றுக் கொண்ட பிறகு அவர் வெளியிட்டுள்ள தமது முதல் அறிக்கையில், மாநில ஆட்சியாளர் Yang di-Pertuan Besar Tuanku Muhriz Tuanku Munawir-இன் ஒப்புதலுடன் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராகத் தம்மை நியமிக்க ஒப்புதல் வழங்கிய மாநில ஆட்சியாளருக்குத் தனது மனமார்ந்த நன்றியையும் இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலத் தேர்தலில் பங்கேற்று கடுமையாக உழைத்த அனைவருக்கும், வாக்களித்த மாநில மக்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து