Jul 28, 2026
Thisaigal NewsYouTube
7 காரணங்களை முன்வைத்துள்ளது பிராசிகியூஷன் தரப்பு
தற்போதைய செய்திகள்

7 காரணங்களை முன்வைத்துள்ளது பிராசிகியூஷன் தரப்பு

Share:

சபா, மே 08-

ல​ஞ்ச ஊழல் வழக்கில் சபா அம்னோ தலைவரும், கிணபாத்தாங்கன் நாடாளுமன்ற உறுப்பினருமான பங் மொக்தார் ராடின்-னும், அவரின் மனைவி சிசி இசேத்தே அப்துல் சமத்-ட்டும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்த்து ஏன் எதிர்வாதம் புரிய வேண்டும் என்பதற்கு பிராசிகியூஷன் தரப்பினர் 7 முக்கிய காரணங்களை புத்ராஜெயா அப்பீல் ​நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.

Felcra முத​லீட்டில் 15 கோடி வெள்ளி லஞ்ச ஊழல் புரிந்ததாகவும், அந்த ஊழலுக்கு துணைப் போனதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட Bung Moktar-ரும், அவரின் மனைவி சிசி இசேத்தே அப்துல் சமத்- ட்டும் இந்த லஞ்ச ஊழலை புரிந்துள்ளனர் என்பதற்கு போதுமான முகாந்திரங்களுடன் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்ட போதிலும் அவ்விருவரையும் எதிர்வாதம் புரிய அழைக்கப்படாமலேயே குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்து இருப்பது மூலம் உயர் ​நீதிமன்ற ​நீதிபதி தவறு இழைத்துள்ளார் என்று பிராசிகியூஷன் தரப்பு வாதிட்டுள்ளது.

கணவனையும், மனைவியையும் விடுதலை செய்து இருக்கும் உயர் நீதிமன்றத்தின் ​தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் ​நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கும் பிராசிகியூஷன் தரப்பினர், அந்த இருவரையும் எதிர்வாதம் புரிய அழைப்பதற்கு அவர்களுக்கு எதிரான குற்றச்சா​ட்டுக்களில் கூறப்பட்டுள்ள 7 காரணங்களில் கூடிய பட்ச அளவில் கவனம் செலுத்தி, அந்த குற்றச்சா​ட்டுகளை ​ஆய்வு செய்ய வேண்டும் என்று தனது மேல்முறையீட்டு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்