Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து நிலையத்தில் ஆடவரி‌ன் உடல் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பேருந்து நிலையத்தில் ஆடவரி‌ன் உடல் மீட்கப்பட்டது

Share:

கூலாய், மார்ச் 17 -

கூலாய், கம்பூங் ஜெயா செதாப்பாக் டில் உள்ள பேருந்து நிலையத்தில் 37 வயதுடைய ஆடவர் ஒருவர் மதுபான டின் - னுடன் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை காலை 8:18 மணியளவில் சம்பந்தப்பட்ட பேருந்து நிலையத்தில் அவ்வாடவர் சட்டை அணியாமல், சுயநினைவின்றி இருப்பதை அவ்வழியாக சென்ற ஒருவர் கண்டறிந்து காவல்துறையிடம் புகார் அளித்ததாக மாவட்ட காவல்துறை தலைவர் சுப்ரின்டென்டன் தான் செங் லீ தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட நபரை பரிசோதனை செய்த போது அவர் இறந்திருப்பதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியாக தான் செங் லீ விளக்கினார்.

மேல் நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட ஆடவரின் உடல் தெமெங்கூங் ஶ்ரீ மஹாராஜா துன் இப்ராஹிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தான் செங் லீ கூறினார்.

இது ஒரு திடீர் மரணமே என்றும் மரணத்திற்கான காரணம் குறித்து தடயவியல் அறிக்கைக்கு காத்திருப்பதாகவும் அவர் மேலும் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்