Oct 10, 2026
Thisaigal NewsYouTube

யூசோஃப் ரவுத்தர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
யூசோஃப் ரவுத்தர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு

கோலாலம்பூர், ஜூன்.16-

போதைப்பொருள் மற்றும் 2 செயற்கைத் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் ஆய்வியல் உதவியாளர் முகமட் யூசோஃப் ரவுத்தர் விடுதலையை எதிர்த்துச் சட்டத்துறை அலுவலகம், அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த ஜுன் 12 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் இந்த மேல்முறையீட்டு மனுவைச் சமர்ப்பித்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

போதுமான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டும், யூசோஃப் ரவுத்தரை எதிர்வாதம் புரியும்படி உத்தரவிடப்படாமலேயே அவரை விடுதலை செய்யப்பட்டதில் சட்டத்துறை அலுவலகத்திற்கு உடன்பாடுயில்லை. 1952 ஆம் ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் யூசோஃப் ரவுத்தர் சம்பந்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு, மேல்முறையீடு செய்யப்படும் என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →