கடந்த வாரம், லான்ஸ் காப்பரல் அந்தஸ்தைக் கொண்ட போலீஸ்காரர் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக குத்தகைத் தொழிலாளர் ஒருவர் இன்று George town செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டார்.
33 வயது, s. ramesh என்ற அந்த குத்தகைத் தொழிலாளர் நீதிபதி Muhammad khalid Abdul Rahman முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச் சாட்டு வாசிக்கப்பட்டது.
Mohammad Azril Syamil Muhamad Hanafi என்ற போலீஸ்காரருக்குக் காயம் விளைவிக்கும் தன்மையில் அவரை கொலை செய்யும் முயற்சியில் Ramesh ஈடுப்பட்டதாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டது
அவர் இக்குற்றத்தைக் கடந்த மார்ச் முதல் தேதி நள்ளிரவு 12.15 மணி அளவில் Timur laut மாவட்டத்தில் உள்ள Lebuh Thean Teik என்ற இடத்தில் Ramesh இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் குறைந்தப் பட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் Ramesh குற்றச் சாட்டை எதிர்நோக்கியிருக்கிறார்.








