நாட்டின் புதிய சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ அஹ்மாட் தெரிருடின் முஹமாட் சாலெஹ், இன்று செப்டம்பர் 6 ஆம் தேதி தமது புதியப் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்று, பணியைத் தொடங்கியுள்ளார்.
மலேசியாவின் அட்டொர்னி ஜெனரல் ஆக பொறுப்பேற்றள்ள தாம், இறைவன் அருகில் தமக்கு இடப் பணியை நம்பிக்கைக்கு பாத்திரமாக திறம்பட செயலாற்றப் போவதாக அஹ்மாட் தெரிருடின் உறுதிக் கூறினார். காலை 8.15 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள சட்டத்துறை அலுவலக கட்டடத்தை வந்தடைந்த அஹ்மாட் தெரிருடின், ஓன்லைன் பதிவில் தமது வருகையை பதிவு செய்தப் பின்னர் முதில் நிலை அதிகாரிகளின் கனிவான வரவேற்புடன் தமது கடமையாற்றத் தொடங்கியுள்ளார்.சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் அரசு தரப்பின் தலைமை வழக்குரைஞரான 55 வயது அஹ்மாட் தெரிருடின், பணி ஒப்பந்தம் முடிவடைந்த தான் ஶ்ரீ இட்ருஸ் ஹாருன்க்கு பதிலாக சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.







