Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பி40 இந்திய சமூகத்தைச் சேர்ந்த 587 மாணவர்களுக்கு 1.55 மில்லியன் உயர்கல்வி உதவி - வீ.பாபாராய்டு தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பி40 இந்திய சமூகத்தைச் சேர்ந்த 587 மாணவர்களுக்கு 1.55 மில்லியன் உயர்கல்வி உதவி - வீ.பாபாராய்டு தகவல்

2026-ஆம் ஆண்டில் B40 இந்திய சமூகத்தைச் சேர்ந்த 587 மாணவர்களின் உயர்கல்விக் கட்டண உதவிக்காக, சிலாங்கூர் மாநில அரசாங்கம் மொத்தம் 1.546 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது.

இதற்காக மொத்தம் 666 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 587 மாணவர்களின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட மாணவர்களில் 130 பேர் டிப்ளோமா பயிலும் மாணவர்கள் என்றும், அவர்களுக்கு 1 லட்சத்து 88 ஆயிரத்து 311 ரிங்கிட் உதவித்தொகையாக வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 457 பேர் இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் என்றும், அவர்களுக்கு 1.358 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாப்பாராய்டு விவரித்துள்ளார்.

இதன் மூலம் 2026-ஆம் ஆண்டுக்கான மொத்த உயர்கல்விக் கட்டண உதவித்தொகை 1.55 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

ஷா ஆலமில் உள்ள டேவான் ஜும்லி பேராக் சுல்தான் அப்துல் அஸிஸ் அரங்கில் இன்று சனிக்கிழமை, நடைபெற்ற உயர்கல்விக் கட்டண உதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சிஎன்இ6 பயிற்சி சான்றிதழ் திட்டத்தின் நிறைவு விழாவில் உரையாற்றிய பாப்பாராய்டு இதனைத் தெரிவித்தார்.

மேலும், இன்றைய வேலை வாய்ப்புச் சந்தையில் கல்வித் தகுதிகள் மட்டுமின்றி, தொழில்நுட்பத் திறன்கள், நடைமுறை அனுபவம் மற்றும் தொழில்முறைச் சான்றிதழ்களும் அவசியம் என்றும் பாப்பாராய்டு வலியுறுத்தினார்.

இதனிடையே, இந்த உதவித் தொகையானது தங்களது பெற்றோரின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பப் பின்னணியைக் கொண்ட 55 பட்டதாரிகள் 2026-ஆம் ஆண்டுக்கான சிஎன்இ6 பயிற்சி மற்றும் சான்றிதழ் திட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.

யுபிபிஎஸ் எனப்படும் சிலாங்கூர் மாநிலத் தொழிலாளர் மேம்பாட்டு பிரிவு, அடாஸ்தா நெட்வோர்க், டெலிகோம் மலேசியா மற்றும் மல்டிமீடியா யுனிவெர்சிட்டி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பி40 இந்திய சமூகத்தைச் சேர்ந்த 587 மாணவர்களுக்கு 1.55 மில... | Thisaigal News