அம்பாங், தாமான் மூடா பகுதியில், இன்று சனிக்கிழமை காலை இரண்டு மாடி வீட்டு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 30 மற்றும் 70 வயதுடைய தந்தை, மகன் இருவரும் தீக்காயமடைந்தனர்.
இது குறித்து சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி செயல்பாட்டு இயக்குநர் அஷ்ருல் ரீஸால் அஸ்பார் கூறுகையில், காலை 8.33 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பண்டான் இண்டா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் மூன்று நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்தனர். அதற்குள் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தனர்.
இந்நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








