Oct 10, 2026
Thisaigal NewsYouTube

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இந்தோனேசியாவுக்கு தீயணைப்பு உதவி வழங்குவது தொடர்பாக, அந்நாட்டிடமிருந்து அதிகாரப்பூர்வ தூதரக வழிகளின் மூலமாக பதில் கிடைக்க மலேசியா இன்னும் காத்திருப்பதாகத் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாகக் கலந்துரையாடியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் சாத்தியமாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கோலாலம்பூரில் உள்ள போஸ் மலேசியா தலைமையகத்தில் இன்று நடைபெற்ற உலக அஞ்சல் தின நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலேசியாவின் வெளியுறவு அமைச்சா விஸ்மா புத்ரா மூலமாக இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மேலும், சிறிது காலம் காத்திருக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ள ஃபாஹ்மி ஃபாட்சீல், பள்ளிகளைத் தற்காலிகமாக மூடுவது, பள்ளிகளின் விளையாட்டு தின நிகழ்ச்சிகளை ஒத்திவைப்பது உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →