Nov 24, 2026
Thisaigal NewsYouTube

நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியாது – சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியாது – சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைக்க மாமன்னர் பிறப்பித்த உத்தரவை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியாது எனச் சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42ஆவது பிரிவின்கீழ், மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் மாமன்னர் எடுத்த முடிவு நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட முடியாது என ஏஜிசி (AGC) குறிப்பிட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் தாக்கல் செய்த நீதிமன்ற மறுஆய்வு மனுவுக்கு சட்டத்துறை அலுவலகம் ஏற்கெனவே ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களும் 2027ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதி முறைகேடு வழக்கில் நஜிப்புக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க கடந்த நவம்பர் 10ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நிபந்தனை அடிப்படையிலான மன்னிப்பின்படி, அவர் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மூன்று உணவகங்களை மிரட்டி சேதப்படுத்திய வழக்கில் 8 பேர் கைது

மூன்று உணவகங்களை மிரட்டி சேதப்படுத்திய வழக்கில் 8 பேர் கைது

2027ஆம் ஆண்டுக்கு பேராக் மாநில வரலாற்றிலேயே மிகப் பெரிய 1.693 பில்லியன் ரிங்கிட் வரவு செலவுத் திட்டம் தாக்கல்

2027ஆம் ஆண்டுக்கு பேராக் மாநில வரலாற்றிலேயே மிகப் பெரிய 1.693 பில்லியன் ரிங்கிட் வரவு செலவுத் திட்டம் தாக்கல்

கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கத் துறையின் புதிய தலைவராக சுஃபியான் அப்துல்லா நியமனம்

கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கத் துறையின் புதிய தலைவராக சுஃபியான் அப்துல்லா நியமனம்

பினாங்கில் நீர்ப்பாசனக் கால்வாய் அருகே தலையில் காயங்களுடன் ஆடவர் சடலம் மீட்பு

பினாங்கில் நீர்ப்பாசனக் கால்வாய் அருகே தலையில் காயங்களுடன் ஆடவர் சடலம் மீட்பு

இன, மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க தேசநிந்தனைச் சட்டத்திற்கு மாற்று இல்லை – பிரதமர் அன்வார்

இன, மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க தேசநிந்தனைச் சட்டத்திற்கு மாற்று இல்லை – பிரதமர் அன்வார்

இந்தியர்களுக்கான விசா சலுகையை ரத்து செய்தால் சுற்றுலாத்துறை பாதிக்கும்: முன்னாள் அமைச்சர் நஸ்ரி எச்சரிக்கை

இந்தியர்களுக்கான விசா சலுகையை ரத்து செய்தால் சுற்றுலாத்துறை பாதிக்கும்: முன்னாள் அமைச்சர் நஸ்ரி எச்சரிக்கை