Nov 24, 2026
Thisaigal NewsYouTube

2027ஆம் ஆண்டுக்கு பேராக் மாநில வரலாற்றிலேயே மிகப் பெரிய 1.693 பில்லியன் ரிங்கிட் வரவு செலவுத் திட்டம் தாக்கல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2027ஆம் ஆண்டுக்கு பேராக் மாநில வரலாற்றிலேயே மிகப் பெரிய 1.693 பில்லியன் ரிங்கிட் வரவு செலவுத் திட்டம் தாக்கல்

பேராக் மாநில அரசு, 2027ஆம் ஆண்டுக்கான 1.693 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்துள்ளது. இது மாநில வரலாற்றிலேயே மிகப் பெரிய பட்ஜெட்டாகும்.

இதில், 593 மில்லியன் ரிங்கிட் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஒதுக்கீடு 25 மில்லியன் ரிங்கிட் அதிகமாகும்.

மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சரானி முஹமட், இன்று மாநில சட்டமன்றத்தில் இந்தப் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது, 2027ஆம் ஆண்டுக்கான மொத்த வருவாய் 1.565 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அதேவேளையில், 128 மில்லியன் ரிங்கிட் பற்றாக்குறை கணிக்கப்பட்டுள்ளது. மொத்தச் செலவினத்தில் 1.1 பில்லியன் ரிங்கிட் நிர்வாகச் செலவுகளுக்கும், 593 மில்லியன் ரிங்கிட் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்ஜெட், மக்களின் நலன், உட்கட்டமைப்பு வசதிகள், பொருளாதார வளர்ச்சி, இளைஞர் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என சரானி தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு ரிங்கிட் செலவிடப்படும்போதும் அது மக்களுக்குப் பயனளிப்பதை உறுதிப்படுத்துவதே மாநில அரசின் நிதி நிர்வாகக் கொள்கை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியாது – சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்

நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியாது – சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்

மூன்று உணவகங்களை மிரட்டி சேதப்படுத்திய வழக்கில் 8 பேர் கைது

மூன்று உணவகங்களை மிரட்டி சேதப்படுத்திய வழக்கில் 8 பேர் கைது

கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கத் துறையின் புதிய தலைவராக சுஃபியான் அப்துல்லா நியமனம்

கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கத் துறையின் புதிய தலைவராக சுஃபியான் அப்துல்லா நியமனம்

பினாங்கில் நீர்ப்பாசனக் கால்வாய் அருகே தலையில் காயங்களுடன் ஆடவர் சடலம் மீட்பு

பினாங்கில் நீர்ப்பாசனக் கால்வாய் அருகே தலையில் காயங்களுடன் ஆடவர் சடலம் மீட்பு

இன, மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க தேசநிந்தனைச் சட்டத்திற்கு மாற்று இல்லை – பிரதமர் அன்வார்

இன, மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க தேசநிந்தனைச் சட்டத்திற்கு மாற்று இல்லை – பிரதமர் அன்வார்

இந்தியர்களுக்கான விசா சலுகையை ரத்து செய்தால் சுற்றுலாத்துறை பாதிக்கும்: முன்னாள் அமைச்சர் நஸ்ரி எச்சரிக்கை

இந்தியர்களுக்கான விசா சலுகையை ரத்து செய்தால் சுற்றுலாத்துறை பாதிக்கும்: முன்னாள் அமைச்சர் நஸ்ரி எச்சரிக்கை