Nov 24, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கில் நீர்ப்பாசனக் கால்வாய் அருகே தலையில் காயங்களுடன் ஆடவர் சடலம் மீட்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கில் நீர்ப்பாசனக் கால்வாய் அருகே தலையில் காயங்களுடன் ஆடவர் சடலம் மீட்பு

பினாங்கு, பத்து காவான் பகுதியில் நீர்ப்பாசனக் கால்வாய் கரையோரத்தில் சேற்றில் பாதியளவு புதைந்த நிலையில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கம்போங் பாரு, லாடாங் பைராம் தோட்டத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் அவ்வழியாகச் சென்ற ஒருவர் சடலத்தைக் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் ரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும், உயிரிழந்தவரின் தலையில் காயங்கள் இருந்ததாகவும் பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சம்பவ இடத்தில் தடயங்களைத் தேடும் பணி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணி வரை நீடித்தது. தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு, அதிகாலை 2.45 மணிக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியாது – சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்

நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியாது – சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்

மூன்று உணவகங்களை மிரட்டி சேதப்படுத்திய வழக்கில் 8 பேர் கைது

மூன்று உணவகங்களை மிரட்டி சேதப்படுத்திய வழக்கில் 8 பேர் கைது

2027ஆம் ஆண்டுக்கு பேராக் மாநில வரலாற்றிலேயே மிகப் பெரிய 1.693 பில்லியன் ரிங்கிட் வரவு செலவுத் திட்டம் தாக்கல்

2027ஆம் ஆண்டுக்கு பேராக் மாநில வரலாற்றிலேயே மிகப் பெரிய 1.693 பில்லியன் ரிங்கிட் வரவு செலவுத் திட்டம் தாக்கல்

கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கத் துறையின் புதிய தலைவராக சுஃபியான் அப்துல்லா நியமனம்

கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கத் துறையின் புதிய தலைவராக சுஃபியான் அப்துல்லா நியமனம்

இன, மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க தேசநிந்தனைச் சட்டத்திற்கு மாற்று இல்லை – பிரதமர் அன்வார்

இன, மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க தேசநிந்தனைச் சட்டத்திற்கு மாற்று இல்லை – பிரதமர் அன்வார்

இந்தியர்களுக்கான விசா சலுகையை ரத்து செய்தால் சுற்றுலாத்துறை பாதிக்கும்: முன்னாள் அமைச்சர் நஸ்ரி எச்சரிக்கை

இந்தியர்களுக்கான விசா சலுகையை ரத்து செய்தால் சுற்றுலாத்துறை பாதிக்கும்: முன்னாள் அமைச்சர் நஸ்ரி எச்சரிக்கை