Nov 24, 2026
Thisaigal NewsYouTube

மூன்று உணவகங்களை மிரட்டி சேதப்படுத்திய வழக்கில் 8 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூன்று உணவகங்களை மிரட்டி சேதப்படுத்திய வழக்கில் 8 பேர் கைது

மலாக்கா, அலோர் காஜா பகுதியில் மூன்று உணவகங்களை மிரட்டி, சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் 30 முதல் 46 வயதுக்குட்பட்ட எட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஸ்ஜிட் தானா மற்றும் கோலா சுங்கை பாரு பகுதிகளில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இது தொடர்பாக ஐந்து போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதுடன், உணவக உரிமையாளர்களை மிரட்டும் காட்சிகளைக் கொண்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளும் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.

வணிக நடவடிக்கைகளை நிறுத்துமாறு உணவக உரிமையாளர்களை மிரட்டியதுடன், உத்தரவைப் பின்பற்றாவிட்டால் உணவகங்களைச் சேதப்படுத்துவதாகவும் மிரட்டியுள்ளனர். ஒரு சம்பவத்தில் மரக்கட்டையைப் பயன்படுத்தி உணவகத்திலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர் என்று அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் அபு பாக்கார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட எட்டு பேரும் விசாரணைக்காக மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவியல் மிரட்டல் மற்றும் சொத்துச் சேதம் தொடர்பான குற்றங்களின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்ற சம்பவங்களில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகின்றனர் என்று அஹ்மாட் அபு பாக்கார் விவரித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியாது – சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்

நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியாது – சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்

2027ஆம் ஆண்டுக்கு பேராக் மாநில வரலாற்றிலேயே மிகப் பெரிய 1.693 பில்லியன் ரிங்கிட் வரவு செலவுத் திட்டம் தாக்கல்

2027ஆம் ஆண்டுக்கு பேராக் மாநில வரலாற்றிலேயே மிகப் பெரிய 1.693 பில்லியன் ரிங்கிட் வரவு செலவுத் திட்டம் தாக்கல்

கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கத் துறையின் புதிய தலைவராக சுஃபியான் அப்துல்லா நியமனம்

கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கத் துறையின் புதிய தலைவராக சுஃபியான் அப்துல்லா நியமனம்

பினாங்கில் நீர்ப்பாசனக் கால்வாய் அருகே தலையில் காயங்களுடன் ஆடவர் சடலம் மீட்பு

பினாங்கில் நீர்ப்பாசனக் கால்வாய் அருகே தலையில் காயங்களுடன் ஆடவர் சடலம் மீட்பு

இன, மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க தேசநிந்தனைச் சட்டத்திற்கு மாற்று இல்லை – பிரதமர் அன்வார்

இன, மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க தேசநிந்தனைச் சட்டத்திற்கு மாற்று இல்லை – பிரதமர் அன்வார்

இந்தியர்களுக்கான விசா சலுகையை ரத்து செய்தால் சுற்றுலாத்துறை பாதிக்கும்: முன்னாள் அமைச்சர் நஸ்ரி எச்சரிக்கை

இந்தியர்களுக்கான விசா சலுகையை ரத்து செய்தால் சுற்றுலாத்துறை பாதிக்கும்: முன்னாள் அமைச்சர் நஸ்ரி எச்சரிக்கை