Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

நேபாளத்தில் பேரிடரின் போது காணாமல் போனவர்களை உயிரிழந்தவர்களாக அறிவிப்பதற்கான காத்திருப்புக் காலத்தை 12 ஆண்டுகளில் இருந்து 45 நாட்களாகக் குறைக்க அந்நாட்டு அரசு முன்மொழிந்துள்ளது.

இந்த முன்மொழிவை ஏற்கத் தயாராக இருப்பதாக, காணாமல் போன மலேசியர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக மலேசிய அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், காணாமல் போன 57 வயதான கலை மதி கருப்பையா குறித்து அவரது கணவர் சிவகுமார் காளிமுத்து கூறுகையில், இந்த முடிவை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

முன்னதாக, காணாமல் போனவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கமாக இருந்ததாகவும், இந்தச் சம்பவத்தில் அது மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த புதிய முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், காணாமல் போனவர்களின் சொத்துகளை மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றுவது எளிதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், காணாமல் போன தீயணைப்பு அதிகாரி முஹமட் ஃபக்ருல் முனிர் முஹமட் இசாவின் மனைவி ஹானி ஒத்மான், மாற்று ஏற்பாடுகள் எதுவும் முன்வைக்கப்படாததால் இந்த முடிவை ஏற்றுக் கொள்வது கடினமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நேபாளத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் பனிச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 6,000-க்கும் அதிகமானோர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த முன்மொழிவு குறித்து மலேசிய வெளியுறவு அமைச்சு ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →