May 21, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஎம் வரலாற்றுப்பாட வினாத் தாள் முன்கூட்டியே வெளியானதா?
தற்போதைய செய்திகள்

எஸ்பிஎம் வரலாற்றுப்பாட வினாத் தாள் முன்கூட்டியே வெளியானதா?

Share:

தற்போது நடைபெற்று வரும் எஸ்பிஎம் தேர்வில் நேற்று பிப்ரவரி 5 ஆம் தேதி, வரலாற்றுப்பாட வினாத் தாள், முன்கூட்டியே வெளியாகிவிட்டதாக கூறப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சு விரிவான விசாரணையை மேற்கொண்டு வருவதாக என்று அதன் அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

தேர்வுக்கு முன்னதாகவே வரலாற்றுப்பாட வினாத் தாள் வெளியாகியிருப்பது, உண்மையென்று கண்டறியப்படுமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட SOP நடைமுறைகளின்படி பொது தேர்வு வினாத்தாள்களை தீவிர கண்காணிப்புடன் பாதுகாப்பதில் கல்வி அமைச்சு உயரிய நம்பகத்தன்மையை கொண்டுள்ளது என்று ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.

Related News