பெத்தாலிங் ஜெயா,பிப்.1
சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் கட்டணங்களை ஏற்கவும், பணம் திரும்பப் பெறும் நேரத்தைக் குறைக்கவும், விற்பனை மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் e-wallet, DuitNow போன்ற சேவைகளைப் பயன்படுத்தவும் வலியுறுத்தப்படுகிறது.
வங்கிகள் வழக்கமாக வணிகர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் பணம் செலுத்தி விடுவதாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சங்கமான Samenta தெரிவித்துள்ளது.
அண்மையில், மசீச தலைவர் வீ கா சியோங்கின் கருத்து குறித்து பேசிய Samenta தலைவர் William Ng குறிப்பிடுகயில், வீ கா சியோங் எழுப்பிய அந்த விவகாரம் அவசர நிலையில் உள்ள பிரச்சனை இல்லை என்றாலும் கூட, பேசப்பட வேண்டிய முக்கியமான ஒன்றாகும் என்றார்.
QR குறியீட்டைப் பயன்படுத்துவதற்கும் இ-வாலட் கட்டணங்களை ஏற்றுக்கொள்வதற்கும் முடிந்தவரை SMEகளை ஊக்குவிப்பதற்காக Samenta வங்கிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவது சிறந்தது என்றாலும், மோசடி நடவடிக்கைகள் போன்றவற்றால் பணப் பரிவர்த்தனைகள் பற்றிய கவலைகள் காரணமாக பொருத்தமானதாக இருக்காது என்று Ng கூறினார்.
கடந்த வாரம் வீ கா சியோங் வெளியிட்டக் கூற்றுக்கு ஆதரவாகக் கருத்துரைத்த, மலேசிய SME சங்கத்தின் பொதுச்செயலாளர் Chin Chee Seong குறிப்பிடுகயில், குறிப்பாக பொது விடுமுறை நாட்களில் வியாபாரிகளுக்குப் பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஒப்புக்கொண்டார்.
சிறிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் SME வியாபாரிகளுக்கு, ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரையில் வங்கிகள் கால அவகாசம் எடுத்துக் கொள்வது முக்கியம் அல்ல எனக் கூறும் அவர், ஆனால் வங்கிகள், ஒவ்வொரு நாளும் பெரிய வகையான பரிவர்த்தனைகள் பற்றி பேசினால், அது நிச்சயமாக பணப்புழக்கத்தை பாதிக்கும் என்றார்








