Oct 10, 2026
Thisaigal NewsYouTube

வர்த்தகரிடமிருந்து புகாரைப் போலீஸ் பெற்றுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வர்த்தகரிடமிருந்து புகாரைப் போலீஸ் பெற்றுள்ளது

குவாந்தான், ஜூன்.13-

கேளிக்கை மையம் ஒன்றில் அரச குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டவர் என்று கூறிக் கொண்ட நபர் ஒருவர், தன்னைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதாக வர்த்தகர் ஒருவர் போலீஸ் புகார் அளித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக அந்த வர்த்தகர் போலீஸ் புகார் அளித்திருப்பதை குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஸாஹாரி வான் பூசு உறுதிப்படுத்தினார்.

மே மாதம் நடந்ததாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து கடந்த ஜுன் 5 ஆம் தேதி 30 வயது மதிக்கத்தக்க அந்த வர்த்தகர் செய்து கொண்ட புகார் அடிப்படையில் இவ்விவகாரம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி வான் முகமட் ஸாஹாரி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →