Jul 28, 2026
Thisaigal NewsYouTube
அதிகாரத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை
தற்போதைய செய்திகள்

அதிகாரத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை

Share:

சராவாக், மார்ச் 8 -

சரவாக்கில் இராணுவத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரியான ஒருவர் தமது அதிகாரத்தையும் ஆள்பலத்தையும் பயன்படுத்தி தனக்கு கீழே பணிபுரியும் அதிகாரியை துன்புறுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து மலேசிய இராணுவம் தி.டி.ம் உள்நிலை விசாரணை வாரியத்தை நிறுவியுள்ளது.

இந்த சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காண்பதற்கும் இக்குற்றச்சாட்டை குறித்து விரிவான முறையில் ஒரு மதீப்பீடு செய்வதற்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள குழு நிறுவப்பட்டதாக தி.டி.ம் ஓர் அறிக்கையில் நேற்று தெரிவித்திருந்தது.

இவ்விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தற்போதைய சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கேற்ப அவருக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்று தி.டி.ம் கூறியுள்ளது.

இந்த வழக்கு விசாரணை முடியும் வரையில் குற்றச்சாட்டப்பட்ட அந்த அதிகாரி அரசு பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தி.டி.ம் அறிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்