Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஏழைகளுக்கு பாரமாக இருக்கக்கூடும் என்பதால் பொருள் சேவை வரி ஒத்தி வைக்கப்படுகிறது – பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஏழைகளுக்கு பாரமாக இருக்கக்கூடும் என்பதால் பொருள் சேவை வரி ஒத்தி வைக்கப்படுகிறது – பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

லுமுட், ஜூன்.15-

எளிதாகவும் திறமையாகவும் இருந்தாலும், பொருள், சேவை வரியை மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். ஜிஎஸ்டி என்பது அனைத்து நுகர்வோர் மீதும், வருமானத்தைப் பொருட்படுத்தாமல் சமமாக விதிக்கப்படும் ஒரு விரிவான வரி என்றும், இது குறைந்த வருமானம் கொண்டவர்களுக்குச் சுமையாக இருக்கும் என்றும் அவர் விளக்கினார்.

மாறாக, அரசாங்கம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை, சேவை வரியைச் செயல்படுத்துகிறது. இது அவொகாடோ அல்லது கோட் மீன் போன்ற விலையுயர்ந்த இறக்குமதி செய்யப்பட்டப் பொருட்களுக்கு வரி விதிக்கிறது. இந்த வரி வருவாயை மருத்துவமனைகள், பள்ளிகள், நாட்டின் பாதுகாப்பு போன்ற உள்கட்டமைப்பை மேம்படுத்தப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →