Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இரண்டு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

இரண்டு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன

Share:

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசினுக்கு எதிராக இரண்டு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன என்று போ​லீஸ் படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார். ​

பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சுஹைஸான் கையாத் க்கு வாக்களிப்பது ஒரு பாவச் செயலாகும் என்று முகை​தீன் கூ​றியிருப்பதாக வெளிவந்துள்ள தகவலின் அ​டிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக துணை ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.

இதன் தொடர்பில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அந்த முன்னாள் பிரதமரின் விசாரணை நடத்தப்படும் என்று அயோப் கான் தெரிவித்துள்ளார்.

Related News