கடந்த ஞாயிற்றுக்கிழமை, பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஓர் உணவகம் அருகில் கார் நிறுத்தும் இடத்தில் மாது ஒருவரின் முன்னிலையில் தமது காற்சட்டையை கழற்றி, ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படும் ஆடவரை போலீசார் கைது செய்தனர்.
அந்த மாது அளித்த போலீஸ் புகாரைத் தொடர்நது கடந்த மூன்று நாட்களாக தேடப்பட்டு வந்த அந்த நபர், நேற்று பிடிபட்டுள்ளார். அந்த நபரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் இன்று நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக செபெராங் பெராய் தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் தான் செங் சான் தெரிவித்தார்.
அந்த மாதுவின் கண்ணியத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் ஆபாச சேட்டைப்புரிந்த அந்த நபர் 1955 ஆம் ஆண்டு சிறு குற்றவியல் சட்டம் 14 ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக தான் செங் சான் கூறினார். 







