May 22, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் உட்கொண்டு டிரெய்லர் ஓட்டிய நபர் ஒருவர் கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் உட்கொண்டு டிரெய்லர் ஓட்டிய நபர் ஒருவர் கைது

Share:

ஈப்போ, ஜூன் 14-

ஈப்போ, மெங்கெலம்பு, ஜாலான் லாஹாட் -டில் போதைப்பொருள் உட்கொண்டு டிரெய்லர் ஓட்டிச் சென்று பெரியவர் ஒருவருக்கு மரணத்தை விளைவித்த ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று காலை 11.29 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 65 வயது அப்பெரியவர் சிகிச்சை பலனின்றி ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் உயிரிழந்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் அபாங் சைனால் அபிடின் அபாங் அஹ்மத் தெரிவித்தார்.

ஒரு தொழிற்சாலையிலிருந்து சிம்பாங் புலாய் -யிற்கு சென்று கொண்டிருந்த சம்பந்தப்பட்ட டிரெய்லர் ஓட்டுநர், சாலையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதி தள்ளியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அபாங் சைனால் கூறினார்.

சந்தேகிக்கும் 33 வயது அந்த டிரெய்லர் ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்ட வேளை, இன்று முதல் நாளை வரை இரண்டு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அபாங் சைனால் மேலும் விளக்கினார்.

Related News