Mar 22, 2026
Thisaigal NewsYouTube
APK ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
தற்போதைய செய்திகள்

APK ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

Share:

கோலாலம்பூர், ஜூன் 04-

விவேக கைப்பேசிகளுக்கான அதிகாரப்பூர்வ தளங்களான Google Play, App Store ஆகியவற்றைத் தவிர, குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக பகிரப்பப்படும் APK எனப்படும் கைப்பேசி செயலி தொகுப்புகளை பொதுமக்கள் தங்களது கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்களின் தரவுகளையும் நிதி குறித்த தகவல்களையும் கொள்ளையிடும் நோக்கில், குற்றவாளிகள் பொதுமக்களின் கைப்பேசிகளை ஊடுருவதற்கு, அந்த அங்கீகாரமன்ற செயலிகளை பயன்படுத்துவதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.

மக்களின் தரவுகளை கொள்ளையிட, கடந்த 2023ஆம் ஆண்டு மத்தியிலிருந்து, ஏமாற்றுப்பேர்வழிகள், திருமண அழைப்பு போன்ற வடிவங்களில் அந்த செயலிகளை குறுந்தகவல் வாயிலாக அனுப்புகின்றனர்.

அதனை உண்மை என நம்பி பொதுமக்கள் தங்களது கைப்பேசிகளில் பதிவிறக்கம் அல்லது சொடுக்கும் போது, அவர்களின் தரவுகள் கொள்ளைப் போவதாக ராம்லி முகமது யூசுப் கூறினார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி