தாம் கொண்டுள்ள மாந்திரீக சக்தியின் மூலம் நோயைப் குணப்படுத்துவதாக கூறி, மாது ஒருவரை மானப்பங்கம் செய்ததாக கூறப்படும் போமோ ஒருவர், கோலத்திரெங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
62 வயதான ஜைனல் சே உமர் என்ற அந்த மாந்திரீகவாதி கடந்த ஜுன் 26 ஆம் தேதி திரெங்கானு, கோலா நெருஸ் என்ற இடத்தில் அரசாங்க குடியிருப்புப்பகுதியில் 31 வயது மாதுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி, ஆபாச சேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 354 பிரிவின் கீழ் அந்த மாந்திரீகவாதி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


