Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இனவாத கூற்றுகள் பெரிக்காதான் நசியனால் தலைவர்களுக்கே பாதிப்பை வழங்கும்
தற்போதைய செய்திகள்

இனவாத கூற்றுகள் பெரிக்காதான் நசியனால் தலைவர்களுக்கே பாதிப்பை வழங்கும்

Share:

கோல குபு பாரு, மே 02-

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெரிக்காதான் நசியனால் கூட்டணி தலைவர்கள் சிந்திப்பதற்கு வேறு எதுவும் இல்லாத காரணத்தினால் தாய்மொழி பள்ளிகள் உட்பட இனம் மற்றும் சமயம் தொடர்பான விவகாரங்களை எழுப்பி வருவதாக, PKR-ரின் தகவல் பிரிவு தலைவர் ஃபாஹ்மி ஃபட்சில் சாடினார்.

அவர்கள் முன்வைக்கின்ற இனவாத கூற்றுகள், அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதனை பெரிக்காதான் நசியனாலின் தேர்தல் பணிப்படையினர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

PAS கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்-ங்கின் பேரப்பிள்ளை உட்பட அக்கட்சியின் பல தலைவர்கள், அவர்களது பிள்ளைகளைச் சீனப் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

மலேசியா மிதவாத போக்கைக் கடைப்பிடிக்கக்கூடிய மக்களைக் கொண்டிருக்கும் ஒரு நாடு. தாய்மொழி பள்ளிகள் உட்பட இனவாத தன்மையிலான விவகாரங்களை அரசியல் கட்சிகள் இன்னமும் முன்வைத்து வருவது முதிர்ச்சியற்ற செயலாக உள்ளது எனவும் FAHMI FADZIL கவலையை வெளிப்படுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்